கேப்ரியேல் புயல் மற்றும் ஆக்லாந்து வெள்ள நிவாரணம் Cyclone Gabrielle and Auckland flooding support

சமீபத்திய கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் ஆதரவு பற்றிய தகவலைக் கண்டறியவும்.

உங்கள் சிவில் பாதுகாப்பு அவசரநிலை மேலாண்மைக் குழுவிலிருந்து உள்ளூர் அறிவிப்புகளைப் பார்க்கவும்

புயல் மீட்புப் பிரிவின் புதுப்பித்தலில் இருந்து சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்

 

நிதி ஆதரவு

வெள்ளம் மற்றும் கேப்ரியல் சூறாவளி நிவாரணத்திற்காக பல நிதிகள் அமைக்கப்பட்டன, இருப்பினும் பல இப்போது மூடப்பட்டு விட்டன. நடப்பு நிதிகள் சிலவற்றின் தொடர்பான தகவலை கீழே காணலாம்.

பிற தேசிய, உள்ளூர் அல்லது பிராந்திய நிதிகள் பற்றிய தகவல்களை ஏஜென்சி இணையதளங்களில் காணலாம்.

ஒர்க் அன்ட் இன்கம்

ஒர்க் அன்ட் இன்கம் உங்களுக்கு தங்குமிடம் அல்லது அவசர மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கு உதவலாம்.

ஒர்க் அன்ட் இன்கம் எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறியவும்

முதன்மை தொழில்கள்

முதன்மைத் தொழில்துறை அமைச்சகம் (MPI) மூலம் விவசாயிகள், பயிர் வளர்ப்போர், whenua Māori உரிமையாளர்கள் மற்றும் ஊரக சமூகங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நல்வாழ்வு, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, விலங்கு நலன் மற்றும் அவசர மீட்பு முயற்சிகளுக்கான ஆதரவு நிதியும் இதில் அடங்கும்.

கேப்ரியல் புயல் நிவாரணத்திற்கான MPI இன் ஆதரவைப் பார்க்கவும்

 

வணிக ஆதரவு

பாதிக்கப்பட்ட வணிகங்கள் மாற்று கட்டண ஏற்பாடுகள் மற்றும் அபராதம் மற்றும் வட்டி விதிவிலக்கு உள்ளிட்ட வரி நிவாரண ஆதரவை பெறலாம்.

மேலும் தகவல் பெறுங்கள்

 

தங்குமிட ஆதரவு

தற்காலிக தங்குமிட சேவை (TAS)

கேப்ரியல் சூறாவளி மற்றும் ஆக்லாந்து வெள்ளத்தைத் தொடர்ந்து நீங்கள் வீட்டில் வசிக்க இயலாத நிலையிலிருந்தால் TAS உதவக்கூடும். பின்வரும் பிராந்தியங்களில் TAS செயல்படுத்தப்பட்டது:

  • நார்த்லேன்ட்
  • கிஸ்போர்ன் 
  • பே ஆஃப் பிளெண்டி 
  • ஹாக்ஸ் பே
  • வைகாடோ 
  • தராருவா மாவட்டம் 

நீங்கள் வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு உங்களுக்கு தற்காலிக தங்குமிடம் தேவைப்பட்டால், நீங்கள் TAS இல் பதிவு செய்யலாம். ஒரு தற்காலிக விடுதி ஒருங்கிணைப்பாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

TAS பற்றி மேலும் அறிக

TAS க்கு பதிவு செய்யவும்

 

மன நலம் மற்றும் நல்வாழ்வு ஆதரவு

உதவியை நாடுவதில் தவறில்லை – வேறொருவர் அல்லது உங்கள் சுய பாதுகாப்பு மீது நீங்கள் கவலை கொண்டிருந்தால் ஒருபோதும் உதவி கேட்க தயங்க வேண்டாம்.

கவலை அல்லது மனநலம் தொடர்பான உதவிக்காக பேச வேண்டுமா (Need to Talk)? என்ற சேவையை  1737  என்ற எண்ணில் அழைத்து பயிற்சி பெற்ற ஆலோசகரிடம் 24/7 மணிநேரமும் இலவசமாக பேசுங்கள் அல்லது குறுஞ்செய்தி அனுப்புங்கள். மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சேவை கிடைக்கின்றது.

பொது உடல்நல ஆலோசனைக்கு 0800 611 116 என்ற ஹெல்த்லைன் எண்ணை அழைக்கவும்.

மனநல அறக்கட்டளை, தேவைப்படும் நபர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு ஆதரவு சேவைகள் பற்றிய தகவல்களையும் தொகுத்துள்ளது.

மன நலம் மற்றும் நல்வாழ்வு ஆதரவு சேவைகள்

 

சமூக ஆதரவு வழங்குநர்கள்

வம்சாவளி சேவை வழங்குநர்கள்

ஆக்லாந்து வெள்ளம் மற்றும் கேப்ரியல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக பணியாற்றும் வம்சாவளி இன வழங்குநர்களின் பட்டியலைக் கண்டறியவும். ஆதரவு தேவைப்பட்டால் நீங்கள் அவர்களை அணுகலாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன சேவை வழங்குநர்களைக் கண்டறியவும்

சமூக இணைப்பாளர்கள்

சமூக இணைப்பாளர்கள் என்பவர்கள் அரசு சாரா நிறுவனங்களால் பணியமர்த்தப்படுகிறார்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அல்லது பிற சேவை வழங்குநர்கள் மூலம் கிடைக்கும் பல வகையான ஆதரவு விருப்பங்களை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு நம்பகமான சேவையாகும். சமூக இணைப்பாளர்களால் மக்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவுகள் மற்றும் சேவைகளுடன் இணைவதற்கு உதவ முடியும்.

உங்கள் பிராந்தியத்தில் ஒரு சமூக இணைப்பாளரைக் கண்டறியவும்

 

மொழி ஆதரவு

மொழிபெயர்த்துரைப்பாளரை அணுகுதல்

நீங்கள் ஒரு அரசாங்க ஏஜென்சியை அழைக்கும்போது உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை (இன்டெர்பிரெட்டரை) கேளுங்கள். தன் சேவைகள் அணுகப்படக்கூடியவை என்பதை உறுதிபடுத்துவது அந்த அரசு ஏஜென்சியின் பொறுப்பு. பொது மக்களுக்கு தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளரை (இன்டெர்பிரெட்டரை)  இலவசமாக வழங்குவது இதில் அடங்கும்.

மேலும் தகவல் பெறுங்கள்

Last modified: