எங்களை பற்றி About us

இன சமூகங்களுக்கான அமைச்சகம் ஆனது நியூசிலாந்து சமூகத்தில் இன பன்முகத்தன்மை மற்றும் உட்சேர்ப்பு ஆகியவற்றின் மீது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தலைமை ஆலோசகராக செயல்படுகிறது.

இன சமூகங்களுக்கு நாங்கள் தகவல், ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குகிறோம்.

 

எங்கள் வேலை

நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்களின் நல்வாழ்வை வலுப்படுத்த சமூகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

நாங்கள் என்ன செய்கிறோம்:

 • இன சமூகங்களில் அரசாங்கக் கொள்கைகளின் தாக்கம் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கான வாய்ப்புகளைத் தேடுதல்
 • இன சமூகங்களின் தேவைகளுக்கேற்ப பொதுத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேம்படுத்துதல்
 • வெற்றிபெற இனச் சமூகங்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அரசாங்கத்திற்குத் தெரிவிப்பது
 • இன சமூகங்கள் தங்கள் இலக்குகளை அடைய ஆதரவளிப்பது.

 

எங்கள் விழுமியங்கள்

 • மனாகிடங்க – அன்பான
 • வக்ககோடஹிடங்கா – உட்சேர்க்கும்
 • வகாமானவனுய் – தைரியமான
 • கக்காவ் போனோ – உண்மையான.

 

எங்கள் யுக்தி

எங்கள் முதல் சில ஆண்டுகளில் நாங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நம் இன சமூகங்களும் முக்கியஸ்தர்களும் எங்களிடம் கூறியதை எங்கள் யுக்தி மேலும் அபிவிருத்தி செய்கிறது. நியூசிலாந்தின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் தாங்கள் இடம்பெறுவும், அதற்கு பங்களிக்கவும், அதில் தாங்கள் வலுவான பங்களிப்பாளர்களாக பார்க்கப்படவும் விரும்புவதாக அவர்கள் கூறினர்.

கியா டோய்போடோ (சம்பள இடைவெளி) செயல் திட்டம் மற்றும் டே டிரிட்டி ஓ வைடாங்கியை கௌரவிப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் உத்தியில் அடங்கும்.

எங்கள் யுக்தியை படிக்கவும்

 

எங்கள் முன்னுரிமைகள்

எங்கள் முன்னுரிமைகள் இன சமூகங்களுடன் நாங்கள் ஈடுபட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.

அமைச்சகத்தின் முன்னுரிமைகள் பின்வருவன என்று மந்திரி சபை ஒப்புக்கொண்டுள்ளது:

 • பன்முகத்தன்மையின் மதிப்பை ஊக்குவித்தல் மற்றும் பரந்த சமூகத்தில் இன சமூகங்களின் உட்சேர்ப்பை மேம்படுத்துதல்
 • இன சமூகங்களுக்கு அரசாங்க சேவைகள் நியாயமான முறையில் வழங்கப்படுவதையும் அவை அவர்களால் எளிதில் அணுகப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்வது
 • இன சமூகங்களுக்கான பொருளாதார நன்மைகளை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பிற்கான தடைகளை பற்றி ஆராய்வது
 • இன சமூக குழுக்களுடன் தொடர்பிலிருப்பது மற்றும் அவர்களை மேம்படுத்துவது.

Last modified: