On this page
ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் என்றால் என்ன?
ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் என்பது ஒருவர் இணையம் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபரைத் துன்புறுத்துதல், மிரட்டுதல், கொடுமைப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஆகும். இது செய்திகள், இடுகைகள் அல்லது பிற ஆன்லைன் செயல்கள் மூலம் நிகழலாம். இது அந்த நபரை வருத்தம், பயம் அல்லது பாதுகாப்பற்றதாக உணர வைக்கும்.
ஒரு நாட்டிற்காகவோ அல்லது அதன் சார்பாகவோ ஆன்லைன் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு வகையான வெளிநாட்டு தலையீடு ஆகும். ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆன்லைனில் நீங்களோ அல்லது உங்கள் சமூகமோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டால் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ன ஆதரவு கிடைக்கிறது மற்றும் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
நீங்கள் ஆன்லைனில் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ என்ன செய்ய வேண்டும்
அந்த நபர் அல்லது கணக்குடனான உங்கள் தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்
'தொடர்பைத் தடுக்க' உங்கள் தொலைபேசியில் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்தவும். இது வேலை செய்யவில்லை என்றால், எண்ணைத் தடுக்க உங்கள் தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைன் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல்
உங்கள் தனியுரிமை அமைப்புகளைப் புதுப்பிக்கவும். தனியுரிமை அமைப்புகளில் உங்களுக்கு உதவும் சமூக ஊடக வழிகாட்டிகளை நெட்சேஃப் வழங்குகிறது.
உங்களைப் பாதுகாப்பற்றதாக உணர வைக்கும் எதையும் நீங்கள் பெற்றிருந்தால், அல்லது நீங்கள் துன்புறுத்தப்பட்டதாக, மிரட்டப்பட்டதாக அல்லது கொடுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தால் அதைப் பற்றி புகாரளிக்கவும்.
அது நடந்த தளம் /இணையதளம்/செயலியில் புகாரளித்தல்
சம்பவம் நடந்த இணையதளம், செயலி அல்லது தளத்தில் புகாரளிக்கும் அம்சத்தைப் பயன்படுத்தவும். நெட்சேஃப் சமூக ஊடக வழிகாட்டிகளில் இதை எப்படி செய்வது என்பது குறித்த தகவல்கள் உள்ளன.
நெட்சேஃப்பிடம் புகார் அளிக்கவும்
புண்படுத்துகிற உள்ளடக்கத்தை நீங்கள் நெட்சேஃப்பிடம் புகாரளிக்கலாம்: கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் - நெட்சேஃப்.
ஆன்லைன் பாதுகாப்பு குறித்த நிபுணர் ஆதரவு, ஆலோசனை மற்றும் உதவியையும் நெட்சேஃப் உங்களுக்கு வழங்க முடியும்.
ஆதரவைப் பெற help@netsafe.org.nz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது 4282 என்ற எண்ணுக்கு ‘Netsafe’ என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
காவல்துறையிடம் புகார் அளிக்கவும்
நீங்கள் ஆபத்தில் இருந்தால், 111 என்ற எண்ணில் உடனடியாக காவல்துறையினரை அழைக்கவும்.
இது ஒரு அவசரநிலை இல்லையென்றால், நீங்கள் காவல்துறையினரை பின்வரு முறைகளில் தொடர்பு கொள்ளலாம்:
- ஆன்லைன் 105 படிவத்தைப் பயன்படுத்தி
- எந்த தொலைபேசி அல்லது லேண்ட்லைனில் இருந்தும் 105 ஐ அழைக்கும் இந்த சேவை இலவசம் மற்றும் நாடு முழுவதும் 24/7 கிடைக்கும்
காவல்துறையினர் உங்கள் புகாரைச் செயல்படுத்தவும், உங்களைப் பின்தொடரவும் உதவும் வகையில், படிவம் 105 உங்கள் தனிப்பட்ட தகவல்களில் சிலவற்றைக் கேட்கிறது. காவல்துறையினர் இந்தத் தகவலை அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
NZSIS-யிடம் புகார் அளிக்கவும்
துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலுக்குப் பின்னால் ஒரு வெளிநாட்டு அரசு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், NZSIS-யிடம் அவர்களின் பாதுகாப்பான ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம். நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பெயர், தொலைபேசி எண் அல்லது தொடர்பு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் சொந்த மொழியிலும் படிவத்தை பூர்த்தி செய்யலாம். நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் இரகசியமானவை மற்றும் பாதுகாக்கப்பட்டவை.
நீங்கள் NZSIS இல் யாரிடமாவது பேச விரும்பினால், +64 4 472 6170 அல்லது
0800 747 224 என்ற எண்ணில் அவர்களை அழைக்கலாம்.
புகாரளிக்கும் போது நெட்சேஃ, காவல்துறை அல்லது NZSIS-யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
புகாரளிக்கும் போது, முடிந்தவரை பல விவரங்களைச் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும். ஸ்கிரீன்ஷாட்டை எடுக்க முயற்சிக்கவும் அல்லது பின்வரும் நகலை சேமிக்கவும்:
- உள்ளடக்கம் என்ன சொல்கிறது அல்லது வெளிப்படுத்துகிறது
- உங்களை துஷ்பிரயோகம் செய்த அல்லது துன்புறுத்தியவர்களின் பயனர் சுயவிவரம் அல்லது கணக்கு விவரம் (எ.கா. அவர்களின் பயனர்பெயர்)
- துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல் பெறப்பட்ட தேதி மற்றும் நேரம்
- அது நடந்த இணையதளம் அல்லது செயலியின் பெயர்
ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல்
ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல் என்பதைப் பார்க்கவும்.