டாக்ஸிங் Doxing

ஒரு வெளிநாட்டிற்காக அல்லது அதன் சார்பாக டாக்ஸிங் செய்யப்பட்டால், இது ஒரு வகையான வெளிநாட்டு தலையீடு ஆகும். டாக்ஸிங் என்றால் என்ன, நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ டாக்ஸிங் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வது என்பது பற்றிய தகவல்களைக் கண்டறியவும்.

டாக்ஸிங் என்றால் என்ன?

டாக்ஸிங் என்பது யாரோ ஒருவர் உங்களிடம் கேட்காமலேயே உங்கள் தனிப்பட்ட அல்லது பிரைவேட் தகவல்களை ஆன்லைனில் வைப்பதாகும். இதில் உங்கள் முழுப் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், நீங்கள் பணிபுரியும் இடம் அல்லது உங்கள் குடும்பத்தின் தொடர்பு விவரங்கள் கூட இருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் மற்றவர்களை அந்தத் தகவலைப் பயன்படுத்தி உங்களைப் பயமுறுத்த, அச்சுறுத்த, துன்புறுத்த அல்லது மிரட்ட ஊக்குவிக்கிறார்கள்.

ஒரு வெளிநாட்டு அரசுக்கு அல்லது சார்பாக டாக்ஸிங் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு வகையான வெளிநாட்டு தலையீடு ஆகும். தனிப்பட்ட மற்றும் பிரைவேட் தகவல்களைப் பொதுவில் பகிர்வது ஒருவரின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்.

நீங்கள் டாக்ஸ் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கூறுங்கள்

நீங்கள் சௌகரியமாக உணர்ந்தால், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியப்படுத்துங்கள். அவர்களும் குறிவைக்கப்படலாம். அவர்களின் சமூக ஊடக சுயவிவரங்களை தனிப்பட்டதாக அமைக்கச் சொல்லுங்கள்.

அது நடந்த தளம் /இணையதளம்/செயலியில் புகாரளித்தல்

சம்பவம் நடந்த இணையதளம், செயலி அல்லது தளத்தில் புகாரளிக்கும் அம்சத்தைப் பயன்படுத்தவும். நெட்சேஃப் சமூக ஊடக வழிகாட்டிகளில் இதை எப்படி செய்வது என்பது குறித்த தகவல்கள் உள்ளன.

நெட்சேஃப்பிடம் புகார் அளிக்கவும்

புண்படுத்துகிற உள்ளடக்கத்தை நீங்கள் நெட்சேஃப்பிடம் புகாரளிக்கலாம்: கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் – நெட்சேஃப்.

நெட்சேஃப் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து நிபுணர் ஆதரவு, ஆலோசனை மற்றும் உதவியையும் உங்களுக்கு வழங்க முடியும்.

ஆதரவைப் பெற help@netsafe.org.nz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது 4282 என்ற எண்ணுக்கு ‘Netsafe’ என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்.

காவல்துறையிடம் புகார் அளிக்கவும்

நீங்கள் ஆபத்தில் இருந்தால், 111 என்ற எண்ணில் உடனடியாக காவல்துறையினரை அழைக்கவும்.

அவசரநிலை இல்லையென்றால், நீங்கள் காவல்துறையினரை பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளலாம்:

ஆன்லைன் 105 படிவத்தைப் பயன்படுத்தி

எந்த தொலைபேசிஅல்லது லேண்ட்லைனில் இருந்தும் 105 ஐ அழைக்கும் இந்த சேவை இலவசம் மற்றும் நாடு முழுவதும் 24/7 கிடைக்கும்.

காவல்துறையினர் உங்கள் புகாரைச் செயல்படுத்தவும், உங்களைப் பின்தொடரவும் உதவும் வகையில், படிவம் 105  உங்கள் தனிப்பட்ட தகவல்களில் சிலவற்றைக் கேட்கிறது. காவல்துறையினர் இந்தத் தகவலை அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

NZSIS-யிடம் புகார் அளிக்கவும்

உங்கள் டாக்ஸிங்கிற்குப் பின்னால் ஒரு வெளிநாட்டு அரசு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், NZSIS-யிடம் அவர்களின் பாதுகாப்பான ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பெயர், தொலைபேசி எண் அல்லது தொடர்பு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. உங்கள் சொந்த மொழியிலும் நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்யலாம். நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் இரகசியமானவை மற்றும் பாதுகாக்கப்பட்டவை.

நீங்கள் NZSIS-யில் யாரிடமாவது பேச விரும்பினால், +64 4 472 6170 அல்லது 
0800 747 224 என்ற எண்ணில் அவர்களை அழைக்கலாம்.

நெட்சேஃப், காவல்துறை அல்லது NZSIS-யிடன் புகாரளிக்கும் போது பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

புகாரளிக்கும் போது, முடிந்தவரை பல விவரங்களைச் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும். ஸ்கிரீன்ஷாட்டை எடுக்க முயற்சிக்கவும் அல்லது பின்வரும் நகலை சேமிக்கவும்:

  • என்ன தனிப்பட்ட அல்லது பிரைவேட் தகவல்கள் பகிரப்பட்டன அல்லது இடுகையிடப்பட்டன
  • அதைப் பகிர்ந்த நபரின் பயனர் சுயவிவரம் அல்லது கணக்கு விவரம் (எ.கா. அவர்களின் பயனர்பெயர்)
  • தகவல் பகிரப்பட்ட அல்லது இடுகையிடப்பட்ட தேதி மற்றும் நேரம்
  • அது நடந்த இணையதளம் அல்லது செயலியின் பெயர்

டாக்ஸிங்கிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது

ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள்

மேலும் தகவலுக்கு ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள் என்பதைப் பாருங்கள்.

ஆன்லைனில் தகவல்களைப் பகிர்வதில் கவனமாக இருங்கள்

உங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளில் உங்கள் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்க்கவும். உங்கள் சுயவிவரங்களை தனிப்பட்டதாக அமைக்கவும். இதனால் நீங்கள் நம்பும் நபர்கள் மட்டுமே உங்கள் தகவலைப் பார்க்க முடியும்.

உங்களைப் பற்றி ஒரு இணையத் தேடலைச் செய்யுங்கள்

உங்களைப் பற்றிய எந்தத் தகவல்கள் பொதுவில் கிடைக்கின்றன என்பதைக் காண உங்கள் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பாருங்கள். உங்கள் முகவரி போன்ற மற்றவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தனிப்பட்ட மற்றும் பிரைவேட் தகவலையும் அகற்றவும்.

உங்கள் சாதனங்களில் இருப்பிடம் மற்றும் ஜியோடேக்கிங் அமைப்புகளை நிர்வகிக்கவும்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கேமராக்கள் உங்கள் இருப்பிட அமைப்புகளைப் பயன்படுத்தி புகைப்படங்களில் இருப்பிடத் தரவை உட்பொதிக்கலாம். இதை உங்கள் வீடு அல்லது உங்கள் குழந்தைகளின் பள்ளி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கண்டறிய பயன்படுத்தலாம். ஜியோடேக்கிங் அல்லது இருப்பிட அமைப்புகளை முடக்குவது சாதனத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே குறிப்பிட்ட வழிமுறைகளுக்கு உங்கள் சாதனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைனில் தேடுங்கள்.

இத்தகவலை பதிவிறக்கம் செய்யுங்கள்

Last modified: