அரசாங்க சேவைகளை அழைக்கும் போது மொழி ஆதரவு Language support when calling government services

நீங்கள் ஒரு அரசாங்க ஏஜென்சியை அழைக்கும்போது உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால் ஒரு interpreter ஐ (இன்டெர்பிரெட்டரை) கேளுங்கள். இந்த சேவையை பற்றி மேலும் கண்டறியுங்கள் மற்றும் உங்கள் சமூகத்துடன் பகிர கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

நீங்கள் ஒரு அரசாங்க ஏஜென்சியை அழைக்கும்போது உங்களுக்கு மொழி ஆதரவு தேவைப்பட்டால் ஒரு இன்டெர்பிரெட்டரை கேளுங்கள்.

தன் சேவைகள் அணுகப்படக்கூடியவை என்பதை உறுதிபடுத்துவது அந்த அரசு ஏஜென்சியின் பொறுப்பு. பொது மக்களுக்கு தொழில்முறை இன்டெர்பிரெட்டரை இலவசமாக வழங்குவது இதில் அடங்கும்.

ஒரு இன்டெர்பிரெட்டரை எவ்வாறு பெறுவது?

  1. அரசு ஏஜென்சியை அழையுங்கள்.
  2. ஒரு இன்டெர்பிரெட்டரை கேட்டு மறுமுனையில் பேசுபவரிடம் நீங்கள் பேசும் மொழியை குறிப்பிடுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேட்க வேண்டியிருப்பதால் “interpreter” (இன்டெர்பிரெட்டர்) மற்றும் உங்கள் மொழிக்கான ஆங்கில பெயர் இரண்டு சொற்களையும் நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் முன் நன்றாக பயிற்சி செய்துகொள்ளுங்கள்.
  3. காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ள படுவீர்கள். தொலைபேசியிலேயே காத்திருங்கள் - இணைப்பை துண்டிக்காதீர்கள்.
  4. ஒரு தொழில்முறை இன்டெர்பிரெட்டர் இருந்தால் உங்களுடன் இணைவார். அரசு ஏஜென்சிகள் ஒரு சில மொழிகளுக்காக இன்டெர்ப்ரெட்டரை முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.

நேர்முக அல்லது காணொளி மாநாடு சந்திப்பிற்கு உங்களுக்கு ஒரு இன்டெர்பிரெட்டர் தேவையென்றால் அந்த நிறுவனத்திற்கு முன்னரே ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

பெரும்பாலான அரசு ஏஜென்சிகள் மற்றும் மாநாடுகள் உங்களின் இன்டெர்ப்ரெட்டிங் ஆதரவுக்கு உதவலாம். முழு பட்டியலை இங்கே காணலாம்: www.mbie.govt.nz/language-assistance-services/participating-agencies

அரசு இன்டெர்ப்ரெட்டிங் சேவைகளை அணுகுவதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ கவலைகளோ இருந்தால் எங்களுக்கு info@ethniccommunities.govt.nz என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இத்தகவலை பதிவிறக்கம் செய்யுங்கள்

அரசாங்க சேவைகளை அழைக்கும் போது மொழி ஆதரவு | Language support when calling government services

Last modified: