நிதியுதவி Funding

ECDF ஒவ்வொரு ஆண்டும் $4.2 மில்லியன் தொகையை சமூக திட்டங்களுக்கு வழங்குகிறது. இன சமூகங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும், கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும், சமூகத்தில் பங்கு கொள்வதற்கும் அமைச்சகத்தின் யுக்திபூர்வ முன்னுரிமைகளுடன் அத்தகைய திட்டங்கள் பொருந்த வேண்டும்.

இந்த வம்சாவளி சமூகங்கள் மேம்பாட்டு நிதி

யார் விண்ணப்பிக்கலாம்?

ஒரு குழுவின் திட்டம் நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்களை ஆதரித்தால் அந்த குழு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம் (இறுதி தேதி எதுவும் இல்லை). 12 வாரங்களுக்குள் உங்களுக்கு மறுமொழி தருவதற்கு இலக்கு கொண்டுள்ளோம். உங்கள் நிகழ்வு அல்லது திட்டம் செயலுக்கு வருமுன்னரே நன்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கவும்.

நீங்கள் எவ்வளவு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சட்ட அந்தஸ்துள்ள குழுக்கள் (அறக்கட்டளைகள் மற்றும் நிறுவப்பட்ட சங்கங்கள் உட்பட) $10,000க்கும் அதிகமான மானிய தொகைக்கு விண்ணப்பிக்கலாம் .

சட்ட அந்தஸ்து இல்லாத குழுக்கள் $10,000க்கும் குறைவான மானிய தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவைகள் பற்றி மேலும் அறியவும்

நிதியுதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த காணொளியை பாருங்கள்.

 

நிதிக்கு விண்ணப்பித்தல்

உங்கள் திட்டம் நிதியின் நோக்கத்தையும் அதன் நான்கு முன்னுரிமைகளில் ஒன்றையும் ஆதரிக்க வேண்டும். முன்னுரிமைகள் ஆனவை அமைச்சகத்தின் முன்னுரிமைகள் போலவே இருக்கும்.

நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இதை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

ECDF பற்றி மேலும் அறிக

Last modified: